முகப்பு / 2018 / பிப்ரவரி

மாதாந்திர ஆவண தொகுப்பு காப்பகம்: பிப்ரவரி 2018

கந்தம் கமழும் குழலி கடைதிறவாய் – பாசுரம் – 2

‘..கந்தம் கமழும் குழலி கடைதிறவாய்..’….’ இராமனுஜரக்கு திருப்பாவை மீது அதிக ஈடுபாடு. அவர் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்டார். தினசரி உஞ்சவிருத்தி செல்லும்பொழுது, திருப்பாவை பாடல்களைப் பாடிக்கொண்டே செல்வார். ஒருநாள், அவர் தமது குரு பெரியநம்பியின் வீட்டருகே செல்லும்பொழுது, ‘ உந்து மதகளிற்றன்.. ’ என்ற பாசுரம் ஆரம்பமாயிற்று. ‘ பந்தார் விரலி ..’ என்ற வரியை அவர் சொல்லுகையில், பெரியநம்பியின் பெண், சிறுமி அத்துழாய், எதேச்சையாக,கதவைத் திறந்து பந்தும் …

மேலும் படிக்க »

ஹலோ கிரேசி

நெல்லுக்கிறைத்த நீர் புல்லுக்குப் பாய்வதும் குருட்டு அதிர்ஷ்டம் தானே….வெண்பாவில் விளக்கம் ப்ளீஸ்….? கோமதி நமச்சிவாயம், நெல்லை “அருச்சுனன் பார்த்த விச்வருபத்தை ,பார்வையற்ற திருதராஷ்டிரனும் பார்த்தான் ….இதுதான் “குருட்டு அதிர்ஷ்டம் ” என்பதோ ….! சகோதரி திரதிராஷ்டிரன் கண்ணனின் விஸ்வரூபம் கண்டது சஞ்சயன் என்கிற சத்சங்கத்தால் என்று சொல்லாமல் சொல்லி அடியேனுடைய திருதராஷ்டிர விழிகளுக்கு ‘’விடிகாலை வெளிச்சம்’’ அளித்தமைக்கு நன்றி சகோதரி….இனி வெண்பா…. ”நெல்லுக்குப் பாய்ச்சிய நீரோடி, கூடிவளர், புல்லுக்கும் பாயுமாப்போல், …

மேலும் படிக்க »

உண்மையான பக்தர் யார்?

உண்மையான பக்தர் யார்? கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள் அந்த காலத்தில். ஒரு பண்டிதர் தினமும் மந்திரங்கள் ஜபித்துக் கொண்டே வருவார். கங்கையில் இறங்கி நீராடுவர். …

மேலும் படிக்க »

பூலோக தெய்வங்கள் ராம்சுரத்-குமார்-1

‘குக்கூ… குக்கூ…’ குருவி அழகாய் கூவியது. கிணற்றில் நீர் எடுத்துக்கொண்டிருந்த பதிமூன்று வயது சிறுவன் ராம்சுரத் குன்வர் தலை நிமிர்ந்து பார்த்தார். ‘அட… என்ன ஒரு அழகான குருவி! உடல் முழுவதும் பொன் துகளை தூவியது போலிருக்கிறதே!’ குன்வருக்குள் ஆச்சர்யம் அரும்பியது. நீர் நிரம்பிய வாளியை கீழே வைத்துவிட்டு தன் சிறிய விரல்களால் குருவியை ‘இங்கே வா’ என்பதுபோல் அழைத்தார். குருவி தலை சாய்த்து குன்வரை பார்த்தது. சில நொடி …

மேலும் படிக்க »

ஆதிசேஷனின் அவதாரம் -3

விந்தியமலைக் காடு முழுவதும் கண்மையை கரைத்து ஊற்றிய தினுசாய் இருளில் மூழ்கிக்கிடந்தது. தூரத்தில் ஒளிர்ந்துகொண்டிருந்த சந்திரன் இரவைப் பகலாக்க திட்டமிட்டு தோற்றுப்போயிருந்தான். எங்கோ கூவிய காட்டுக்குயிலின் குக்கூ… சத்தம் காற்றில் கலந்து தேய்ந்துபோய் கேட்டது. பகலில் பச்சை நிறம் காட்டும் மரங்கள், இரவில் கருப்பு நிறம் காட்டி பயமுறுத்திக்கொண்டிருந்தன. ராமானுஜர் வேகமாய் நடந்துகொண்டிருந்தார். அதை நடை என்று சொல்வதைவிட ஓட்டம் என்றே சொல்லலாம். அவ்வளவு வேகம். உடலில் ஆங்காங்கே முட்கள் …

மேலும் படிக்க »

திருப்புகழ் காட்டும் இறை இன்பம்

அருணகிரிநாதர் அருவியெனப் பொழிந்த ஆறுமுகன் துதி நூலே திருப்புகழ். சந்தம் முந்தும் செந்தமிழில் சரமாரியாக விந்தை செய்த வித்தகர். கந்தனைப் போற்றிய அந்தக் கவிதைகளில் காணக்கிடக்கும் உவமைகள் ஏராளம். அணிகளின் தாயாக விளங்கும் உவமை, அலங்காரத்துக்காக மட்டுமல்ல… ஆழ்ந்திருக்கும் கவியுள்ளத்தையும் கவிஞனின் அனுபவப் பெருக்கையும் அற்புதமாகக் காட்டும். இறைமை இன்பத்தை எதனோடு ஒப்பிடுவது? பக்தர்களின் நெஞ்சத்தில் எழும் பரவசத்தை எழுத்துகளில் காட்டி விடமுடியும் என்று சொன்னால், அதை எல்லையற்ற இன்பம் …

மேலும் படிக்க »

ஞானம் பெற வழி

அந்தக் காவலாளி சொன்னதுஅதிர்ச்சியாகவும் குழப்பமாகவும்இருந்தது. பிரம்ம ஞானம் பெறவேண்டும் என்பதற்காக தனது தந்தையின் ஆலோசனைப்படி, ஜனக மகாராஜாவைத் தேடி வந்திருந்தார் சுகமுனிவர். ஜனக மகாராஜா இல்லற ஞானி; துறவிகளால் போற்றப்படும் அரசர். அவரின் அரண்மனை வாயில்காவலனிடம், ‘‘சுக பிரம்ம மகரிஷி அவர்கள் வந்திருப்பதாகச் சொல்”. காவலாளி உள்ளே சென்று வந்தவன் ‘‘அவரை மட்டும் வரச் சொல் என்று அரசர் கூறியதாகக் கூறினான். என்னுடன் யாரும் வரவில்லை. நான் மட்டும்தான் தனியாக வந்திருக்கிறேன். ஆனால் …

மேலும் படிக்க »

நா மணக்கும் நாச்சியார் தமிழ் -1

நா மணக்கும் நாச்சியார் தமிழ் அன்ன வயற்புதுவை யாண்டாள் அரங்கற்கு பன்னு திருப்பாவை பல்பதியம் – இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமலை பூமாலை சூடிக்கொடுத்தாளை சொல்லு சூடிக்கொடுத்த சுடர்கொடியே தொல்பாவை பாடியருளவல்ல பல்வளையாய் – நாடி நீ வேங்கடவற்கு என்ன விதியென்றவிம்மாற்றம் நான்கடவா வண்ணமா நல்கு. பட்டர்பிரான் கோதை,பெரியாழ்வார் பெற்றெடுத்த பெருஞ்செல்வம்,பைந்தமிழால் திருமால் ஸ்ரீமன் நாராயணனை மானிடர் பெற இயலா பேறாக, பறையாகப் பாடிப் பெற்றவள். ஆண்டாள் என்ற பெயர் கொண்டாள் …

மேலும் படிக்க »

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் 1

திருவாரூர் தியாகேசன் திருக்கோயில் “ தேராரும் நெடு வீதித் திருவாரூர்” என்று சேக்கிழார் சுவாமிகள் புகழ்ந்து பாடிய ஆரூர் என விருப்பமாக வழங்கப்படும் திருவாரூர் கொண்ட பெருமைகள்அளப்பரியது என்பதை புராணங்கள் , தல வரலாறு விரித்துக் கூற எவரையும் வியப்பு பற்றிவிடும். தமிழக திருக்கோயில்களிலேயே , மற்ற எல்லா ஆலயங்களையும் விடவும் ஆரூர் திருக்கோயில் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதை , கி.பி. 7ம்நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் மாடமொடு …

மேலும் படிக்க »

படியாய் கிடந்து பவளவாய் காண்பேன்

படியாய் கிடந்து பவளவாய் காண்பேன் வைணவம் என்னும் பொற்கிரீடத்தை ரத்தினங்களாய் அலங்கரிப்பவர்கள் ஆழ்வார்கள். ஆழ்வார்களால் வைணவத்திற்கு பெருமையா? வைணவத்தால் ஆழ்வார்கள் பெருமை பெற்றார்களா? என்கிற கேள்வி விடை காணமுடியாதது. ஒவ்வொரு ஆழ்வாரும் ஒவ்வொரு வகையில் சிறப்புப் பெற்றவர்கள். அவ்வகையில் குலசேகர மகாராஜாவாக ஆட்சிபுரிந்து வந்தவர், ராமனின் மீது ஏற்பட்ட பற்றால் குலசேகர ஆழ்வாராக மாறினார். அச்சம்பவம் சுவாரசியமானது. போர், யுத்தம் என வெறுத்தப்போன குலசேகரர் வைணவப் பெரியவர்களைக்கொண்டு தினமும் ராமாயணக் …

மேலும் படிக்க »